இந்தியா

ஜம்மு- காஷ்மீரில் மேலும் 10 ஆயிரம் படை வீரர்கள் குவிப்பு

ஜம்மு- காஷ்மீரில் மேலும் 10 ஆயிரம் படை வீரர்கள் குவிப்பு

webteam

மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதலாக 10 ஆயிரம் மத்திய ஆயுதப்படை பிரிவு போலீஸ் (CAPF) வீரர்களை காஷ்மீரில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்தப் பயங்கரவாத தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்தியதாக ஒப்புக்கொண்டது. இந்தத் தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது கூடுதலாக 10 ஆயிரம் சிஏபிஎப் வீரர்களை காஷ்மீரில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஜம்மு- காஷ்மீர் அரசிற்கு ஒரு ஆணையை அனுப்பியுள்ளது. அதில் 45 கம்பெனி சிஆர்பிஎப் படை வீரர்கள், 10 கம்பெனி இந்தியா-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், 10 கம்பெனி சஷஸ்த்திர சீமா பல்(Sashastra Seema Bal),35 கம்பெனி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஆகிய படைகளின் வீரர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூடுதல் படை குவிப்பிற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஏற்கெனவே ஜம்மு- காஷ்மீர் பகுதிகயில் பாதுகாப்பிற்காக 65 ஆயிரம் சிஏபிஎப் வீரர்கள் பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.