இந்தியா

சமஸ்கிருதத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு: ரூ.100 நோட்டில் எழுத மத்திய அரசு முடிவு

webteam

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை ஒட்டிப் புதிய நாணங்களில் அவரது உருவம் பதிக்கவும் சமஸ்கிருதத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு என எழுதவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நினைவுபடுத்தும் விதமாக அவரது உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிடப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்திக்குறிப்பில், நாணயத்தின் முன்புறம் அசோகச் சக்கரமும், பின்புறத்தில் எம்.ஜி.ஆரின் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு என்று ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் எழுதப்பட்டிருப்பதுடன், நூற்றாண்டைக் குறிக்கும் வகையில் 1917-2017 என்ற ஆண்டும் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.