தமிழக கடலோர மற்றும் வட மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று தனியார் வானிலை ஆய்வாளர்களுடன் தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், மழைத் தொடர்பான ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில், தமிழகத்தில் இந்த மழை எப்படி இருக்கும்? கன மழையாக இருக்குமா? என்று ஆய்வாளார்களுடன் ஆலோசனை நடந்தது.
தமிழகத்தில் எங்கெங்கு கனமழைக்கு வாய்ப்பு
நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை போன்ற மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.