இந்தியா

அமெரிக்காவில் பிறக்காத நாட்டின் முதல் பெண்மணி மெலனியா

அமெரிக்காவில் பிறக்காத நாட்டின் முதல் பெண்மணி மெலனியா

webteam

அமெரிக்கா; அமெரிக்கர்களுக்கு மட்டுமே என அடிக்கடி கூறும் ட்ரம்ப், திருமணம் செய்திருப்பதே வெளிநாட்டைச் சேர்ந்த மெலினாவைத்தான். யார் இந்த மெலனியா? அவரின் பின்புலம் என்ன?

ஸ்லோவேனியா நாட்டை சேர்ந்தவர் மெலனியா. 1996 ஆம் ஆண்டு டூரிஸ்ட் விசா மூலம் அமெரிக்காவுக்குள் நுழைந்து அங்கு விதிகளுக்குப் புறம்பாக மாடலிங் துறையில் பணிபுரிந்தார். இவர் ட்ரம்பை முதன்முதலில் 1998 ஆம் ஆண்டு ஓர் இரவு விருந்தில்தான் சந்தித்தார். அதன்பின் ட்ரம்புடைய ஆதரவால், முறைப்படி 2000 ஆம் ஆண்டு விசா பெற்று குடியுரிமையும் பெற்றார்.

மெலனியாவுடன் பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு தனது இரண்டாவது மனைவி மார்லாவை விவாகரத்து செய்துவிட்டு 2005 ஆம் ஆண்டு மெலனியாவை திருமணம் செய்துகொண்டார் ட்ரம்ப். பின்னர் ட்ரம்ப் அதிபரானபோது அமெரிக்காவில் பிறக்காத நாட்டின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்து மெலனியாவுக்கு கிடைத்தது.

அதிபர் ட்ரம்புக்கு மனைவி என்பதையும் தாண்டி, மெலனியா ஒரு மாடல் மற்றும் பொருளாதார நிபுணர். ட்ரம்பின் அனைத்து தொழில்களையும் கவனித்துக்கொள்ளும் மெலனியா, பொதுவாக தேர்தல் பரப்புரையிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ கலந்துகொண்டு பேசுவதில்லை. இருந்த இடத்திலிருந்தே இணையதள பிரச்சாரங்களை முன்னின்று நடத்தி வாக்காளர்களை கவர்பவர் அவர். ட்ரம்ப்- மெலனியா தம்பதிக்கு 13 வயதில் பரோன் டிரம்ப் என்ற மகன் இருக்கிறார்.