இந்தியா

வாட் வரி குறைப்பு; பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.7 குறைத்த மேகலயா அரசு!

வாட் வரி குறைப்பு; பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.7 குறைத்த மேகலயா அரசு!

webteam

மேகலாய அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் குறைத்துள்ளது.

இது குறித்து அம்மாநில முதல்வர் கான்ராட் சங்மா கூறும் போது, “பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தோராயமாக 7 ரூபாய் வரை குறைக்கப்படுகிறது. இந்த விலைக்குறைப்பு நடவடிக்கை, நுகர்வோர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்திற்காகவும், இதன் மூலம் அவர்கள் சிறிது நிவாரணம் அடைய இயலும் என்ற காரணத்திற்காகவும் எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர்களை மனதில் கொண்டு இந்த அம்சம் கொண்டுவரப்பட்டாலும்
கொரோனா காலங்களில் மாநிலம் நிதி நெருக்கடியை சந்தித்த போது பெட்ரோல், டீசலில் இருந்து வசுலிக்கப்பட்ட வாட்வரி உதவியது. அதன் படி பெட்ரோலுக்கான வாட் வரி 31.62 சதவீதமாகவும், டீசலுக்கான வாட் வரி 20 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது. இந்த வரிக்குறைப்பின் மூலம் பெட்ரோல் விலையானது லிட்டருக்கு Rs 91.26 ரூபாயிலிருந்து Rs 85.86 ரூபாயாக குறையும். டீசல் விலை லிட்டருக்கு Rs 84.23 ரூபாயிலிருந்து Rs 79.13 ரூபாயாக குறையும்.

முன்னதாக அஸ்ஸாம் மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இது குறித்து சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “ கொரோனா காலத்தில், நிதி நெருக்கடியை சமாளிக்க பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதால் அந்த வரி ரத்து செய்யப்படுகிறது. அதன் மூலம் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ 5 குறையும்” என்றார்.