இந்தியா

மேகாலயாவையும் நாசம் செய்யும் வெள்ளம் – 5 பேர் பலி, ஒன்றரை இலட்சம் பேர் பாதிப்பு.

மேகாலயாவையும் நாசம் செய்யும் வெள்ளம் – 5 பேர் பலி, ஒன்றரை இலட்சம் பேர் பாதிப்பு.

Veeramani

அசாம் மாநிலத்தைபோலவே அதன் அண்டை மாநிலமான மேகாலயாவும் தொடர் மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெள்ளத்துக்கு 5 பேர் பலியானதுடன் ஒன்றரை இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேகாலயாவிலுள்ள மேற்கு காரோ மலைப்பகுதிகள்தான் வெள்ளப்பெருக்கால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் டிக்ரிகில்லா சமூகத்தை சேர்ந்த மக்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுவரை வெள்ளத்திற்கு 5 பேர் பலியாகியுள்ளதாகவும், ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இந்த பகுதி முழுவதும் கடந்த ஒரு வாரமாகவே தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. மேலும் வெள்ளநீரின் அளவு படிப்படியாக அதிகரித்துவருவதாகவும் தெரிவிக்கின்றனர். பிரம்மபுத்ரா நதியினால்தான் அதிகளவு வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சொல்கின்றனர். இதனால் 175 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 1,70,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 22 மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. வெள்ளத்தில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் மூலமாக உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.