குடியரசு தின அணிவகுப்பில் ஃப்ளைபாஸ்ட் எனப்படும் அதிவேக விமானப்படையை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை விமான லெப்டினன்ட் சுவாதி ரத்தோர் பெறவுள்ளார்.
ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பின் போது டெல்லியின் ராஜ்பாத்தில் நடைபெறவுள்ள ஃப்ளை பாஸ்ட் எனப்படும் அதிவேக விமானப்படை அணிவகுப்பை வழிநடத்திய முதல் பெண்மணி என்ற வரலாற்று சாதனையை, இந்திய விமானப்படையின் லெப்டினன்ட் சுவாதி ரத்தோர் விரைவில் படைக்கவுள்ளார்.
சுவாதியின் சாதனைப்பற்றி பேசும் அவரின் தந்தை டாக்டர் பவானி சிங் ரத்தோர் “என் மகள் என்னை தலைநிமிர வைத்திருக்கிறாள். அவள் கண்ட கனவு நனவாகிவிட்டதால் எனக்கு முழுமையான நிறைவு கிடைத்திருக்கிறது ” மாநில வேளாண்மைத் துறையின் துணை இயக்குநராக இருக்கும் பவானிசிங் ரத்தோர், அனைத்து பெற்றோர்களையும், தங்கள் மகள்களின் கனவுகளை நிறைவேற்ற ஊக்குவிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
சுவாதி ரத்தோர் ராஜஸ்தானின் நாகவுர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார், அஜ்மீரில் பள்ளிப்படிப்பை முடித்தார். சுவாதி குழந்தையாக இருக்கும்போது நடந்த ஒரு ஓவியப் போட்டியில், அவர் ஒரு இந்தியாவின் மூவர்ணக்கொடியை வரைந்து, தனது நாட்டின் மீதான தனது உணர்ச்சியைக் காட்டினார். இதனால், சுவாதியின் கனவை நனவாக்க அவரின் பெற்றோர் அவரை தொடர்ந்து ஊக்குவித்தனர் , சுவாதி பட்டப்படிப்பை முடித்த பிறகு என்.சி.சி ஏர் விங்கில் நுழைந்தார். மேலும் சுவாதி ஒரு பைலட் ஆக வேண்டும் என்று கனவு கண்டார், 2014 ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஃப் இல் தனது முதல் முயற்சியிலேயே விமானியாக தேர்வு செய்யப்பட்டார். அவரது சகோதரரும் வணிக கடற்படையில் பணியாற்றுகிறார்.