மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி உள்ளிட்ட மருந்துகளை விற்பனை செய்ய மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க உள்ளது.
மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் எந்த மருந்தையும் விற்பனை செய்ய கூடாது என்ற விதி நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியமான DTAB, குறிப்பிட்ட சில மருந்துகளை , மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என்ற கொள்கைக்கு அனுமதி அளித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை சுகாதாரத் துறை அமைச்சகம் விரைவில் வெளியிட உள்ளது. இதன் பின்னர், வலி நிவாரணி, இருமல் மருந்து, பல் ஈறு தொற்றுக்கான மருந்துகள், ரத்தக்கசிவை நிறுத்தும் மருந்துகள், மலமிளக்கிகள் ஆகியவற்றை மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்தகங்களில் வாங்க முடியும்.