இந்தியா

41 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக் ஸ்பான்சர்ஷிப்பை திரும்பப் பெறும் மெக்டொனால்ட்ஸ்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக் ஸ்பான்சர்ஷிப்பை திரும்பப் பெறும் மெக்டொனால்ட்ஸ்

webteam

துரித உணவுகள் தயாரிப்பில் உலக அளவில் முன்னணி நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் நிறுவனம், ஒலிம்பிக் விளம்பர ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தம் முடிய 3 ஆண்டுகள் இருக்கும் நிலையில், இந்த தகவலை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், வியாபாரரீதியிலான மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகளை புரிந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக் போட்டிக்கு 1976 மாண்ட்ரியல் ஒலிம்பிக் முதல் ஸ்பான்சர்ஷிப்பை வழங்கி வருகிறது. பிரேசிலின் ரியோ நகரில் கடந்தாண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது விளையாட்டு வீரர்களுக்கு இலவச உணவுகளை மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் அளித்தது. இதற்காக ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்கள் தங்கிருந்த ஒலிம்பிக் கிராமத்தில் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் அமைத்திருந்த கடை காலை முதல் மாலை வரை வீரர்கள் வரிசையால் நிறைந்திருந்தது.