இந்தியா

’’களத்தில் இறங்கி பணிசெய்வதே ஒரு தலைவரின் கடமை’’ - 21 வயது மேயர் ஆர்யா

Sinekadhara

’’களத்தில் இறங்கி பணிசெய்வதே ஒரு தலைவரின் கடமை’’  என்கிறார் 21 வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன்.

திருவனந்தபுரம் மேயர் தேர்தலில் வெற்றிபெற்ற 21 வயது பெண் ஆர்யா ராஜேந்திரன்தான் இந்தியாவின் இளம்வயது மேயராவார் என செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சிபிஎம் கட்சியின் திருவனந்தபுர செயலாளர் அனாவூர் நாகப்பன் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ஊரார் சாலையின் இருபுறமும் ஆர்யாவின் வருகைக்காக காத்திருக்க, தனது தந்தையுடன் வந்த ஆர்யா, தனது அரசியல் பயணம் குறித்து பேசினார். அப்போது, ’’நான் சிறுமியாக இருந்தபோதிலிருந்தே எனது தந்தை என்னை அவருடன் கட்சிக்கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வார். ஆனால் நான் 5ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது பாலசங்கம் அமைப்பில் இணைந்தேன். அப்போதிலிருந்தே என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பித்தது. சிபிஎம் கட்சி உறுப்பினர்களான எனது பெற்றோர் என்னை சரியான வழியில்தான் நடத்தியிருக்கிறார்கள். கல்லூரியில் படிக்கும்போது சிபிஎம்-இன் இந்தியர் மாணவர் கூட்டமைப்பில் இணைந்து பணியாற்றினேன். அது தேர்தல் நேரத்தில் மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி அவர்கள் தேவைகளை தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது.

கழிவு மேலாண்மைதான் எனது தொகுதி மற்றும் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய பணியாக இருக்கிறது. அதேபோல் முடவன்முகலில் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டுவருவதும் மிகமிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்தப் பகுதியில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மருத்துவமனைக்குச் செல்வது என்பது கடினமான ஒன்றாக இருக்கிறது. எனவே 24 மணிநேர ஆரம்ப சுகாதார நிலையம் என்பது அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. மேலும், இளைஞர்களுக்கு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதும் தேவையான ஒன்றாக இருக்கிறது.

மேலும் நெருக்கடி காலங்களில் அதை சமாளித்து களத்தில் இறங்கி மக்களுக்கு பணிசெய்வதும் ஒரு தலைவரின் கடமை’’ என்று பேசினார்.

Source: https://www.thenewsminute.com/article/meet-21-year-old-arya-rajendran-new-mayor-thiruvananthapuram-140371