இந்தியா

டெல்லியில் 70 ஆண்டுகளுக்குப் பின் மே மாதத்தில் குறைந்த வெப்பம்

டெல்லியில் 70 ஆண்டுகளுக்குப் பின் மே மாதத்தில் குறைந்த வெப்பம்

webteam

டெல்லியில் 1951 ஆம் ஆண்டுக்குப் பிறகு மே மாதத்தில் மிகக் குறைந்த அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

டவ் தே புயல் காரணமாக டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் டெல்லியில் 119.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மழைப்பொழிவு, டெல்லியில் மே மாதங்களில் இதுவரை பதிவாகாத அளவில் அதிகபட்ச அளவு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1976 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி 60 மில்லி மீட்டர் மழை பெய்தது தான் இதுவரை அதிகபட்ச மழைப்பொழிவாக இருந்தது. இதனிடையே, டெல்லியில் மே மாதங்களில் கடும் வெப்பம் நிலவும் சூழலில் தொடர் மழையின் காரணமாக நேற்று 23.8 டிகிரி செல்சியஸ் அளவிற்கே வெப்பம் பதிவானது. இது 1951 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவாகும் மிகக் குறைந்த பட்ச வெப்பநிலை என்பது குறிப்பிடத்தக்கது.