மகப்பேறு, குழந்தை பராமரிப்பு விடுப்பு முகநூல்
இந்தியா

மகப்பேறு, குழந்தை பராமரிப்பு விடுப்புக்கு ஒப்புதல்! முப்படை அதிகாரிகளை போலவே இனி வீராங்கனைகளுக்கும்!

முப்படைகளில் பெண் அதிகாரிகளை போல இனி அதில் பணிபுரியும் பெண் வீராங்கனைகளுக்கும் மகப்பேறு, குழந்தை பராமரிப்பு விடுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

ஜெனிட்டா ரோஸ்லின்

முப்படைகளில் பெண் அதிகாரிகளை போல இனி அதில் பணிபுரியும் பெண் வீராங்கனைகளுக்கும் மகப்பேறு, குழந்தை பராமரிப்பு விடுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த முப்படைகளிலும் இருக்கும் பெண் அதிகாரிகளுக்கு மகப்பேறு, குழந்தை பராமரிப்பு விடுப்பு போன்றவற்றுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு அந்நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்க்.

இந்நிலையில், முப்படைகளிலும் பணிபுரியும் பெண் அதிகாரிகள் மட்டுமல்லாமல் பெண் வீரங்களைகளுக்கும் இவ்விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற ஆலோசனைக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் ஒப்புதல் அளித்துள்ளார்.

மகப்பேறு விடுப்பு

முன்னதாக ராணுவம், விமானம், கடல் என்று இம்மூன்றிலும் பணிபுரியும் பெண் வீராங்கனைகளுக்கு மகப்பேறு விடுமுறையாக 1 குழந்தைக்கு முழு சம்பளத்துடன் 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு என அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு இவ்வகையான விடுப்பு என்பது வழங்கப்படுகிறது.

குழந்தை பராமரிப்பு விடுப்பு:

அதேபோல் குழந்தை பராமரிப்பு விடுமுறை என்பது ஒட்டு மொத்த பணிகாலத்தில் 1 வருடம் அதாவது 360 நாட்கள் விடுப்பு. குறிப்பாக குழந்தை 18 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தத்தெடுப்பு விடுப்பு:

குழந்தையை தத்தெடுத்த தேதியில் இருந்து 180 நாட்கள் விடுப்பு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இத்தகைய விடுப்பு ஆலோசனைக்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய ராணுவ அமைச்சகம் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், ”பெண் அதிகாரிகளுக்கான விடுப்பு சலுகை என்பது தற்போது வீராங்கனைகளுக்கும் பொருந்தும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் இராணுவத்தில் இருக்கும் பெண்களின் நிலையை மேம்படுத்தவும் அவர்களின் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையை சிறந்த முறையில் கையாளவும் சமநிலையில் வைத்திருக்கவும் உதவும் வகையில் அமையும்.

மகப்பேறு, குழந்தை பராமரிப்பு விடுப்பு

பெண்கள் நிலம். கடல்,வான் என்று அனைத்தியில் தேசபக்தியுடனும், துணிச்சலுடனும் பணியாற்றி வருகிறார்கள். மேலும் ஆயுத படைகளில் தடைகளை தகர்த்து, உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினில் பணியமர்த்தப்பட்டும் இப்படி எல்லா தடைகளையும் தகர்த்து எறிந்து பணியாற்றி வருகிறார்கள்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் முன்னேற்றம்:

பெண் முன்னேற்றம் என்பது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் பரிணாமத்திற்கும் தொடக்க புள்ளி. மேலும், பெண்களின் முன்னேற்றம் என்பது சமூக, குடும்ப முன்னேற்றத்தில் மட்டுமல்ல அதன் அடிப்படையே உடல் நலனை பேணுவதில்தான் இருக்கிறது. சமுதாயத்தில் மாற்றம் உருவாக்கப்படுவதற்கு மனிதனும் ஒரு காரணம் தான். இதன் அடிப்படையில் குழந்தையின் வளர்ப்பு என்பது மிகவும் அவசியம். குழந்தையின் வளர்ப்பில் தாயின் அரவணைப்பும் அன்பும் மிக அதிகமாகவே தேவை. அந்தவகையில் இந்த முன்னெடுப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று !