இந்தியா

பிஎஸ்என்எல் ஊழியர்கள் 78,000 பேர் இன்றுடன் விருப்ப ஓய்வு

பிஎஸ்என்எல் ஊழியர்கள் 78,000 பேர் இன்றுடன் விருப்ப ஓய்வு

Rasus

பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் ‌78 ஆயிரத்திற்கும்‌ மேற்பட்டோர் இன்று ஒரேநாளில் விருப்ப ஓய்வு பெறுகின்றனர். இதனால் அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாக குறையவுள்ளது.

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவரும் நிலையில், அதன் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்திருந்தனர். நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 786 பேர் பணியாற்றிய நிலையில்,‌ 78 ஆயிரத்து 569 பேர் இன்று விருப்ப ஓய்வு பெறுகின்றனர்.

இதேபோல மும்பை, டெல்லி தொலைபேசி சேவைகளைக் கவனிக்கும் அரசுத்துறை நிறுவனமான எம்டிஎன்எல் நிறுவனத்தில் இருந்து 14 ஆயிரத்து 378 பேர் பணியில் இருந்து விரும்பி விலகுகின்றனர். பலர் இன்றுடன் ஓய்வு பெறுவதால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாக குறைய உள்ளது.