இந்தியா

உள்ளூர் விவசாயிகளுக்கு கட்டணமா?... சுங்கச்சாவடியை முகமூடி அணிந்து தாக்கிய கும்பல்

உள்ளூர் விவசாயிகளுக்கு கட்டணமா?... சுங்கச்சாவடியை முகமூடி அணிந்து தாக்கிய கும்பல்

webteam

மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள சுங்கச்சாவடியில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்குக் காரணம், அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுடன் ஏற்பட்ட பிரச்சினையாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்தூர் - அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிமீது முகமூடி அணிந்த 35 பேர் அடங்கிய கும்பல் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, சுங்கச்சாவடிக்கு இருபுறமும் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மாதக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்களோ மாதந்தோறும் ரூ. 250 செலுத்தவேண்டும் என வலியுறுத்தினர்.

கோப்புப் படம் 

கட்டணத்தைக் குறைத்துக்கொள்ள மறுப்புத் தெரிவிக்கவே 35 அடங்கிய விவசாயிகள் மேத்வாடா என்ற பகுதியில் இருந்த சுங்கச்சாவடியை கற்கள் மற்றும் தடிகளைக் கொண்டு தாக்கி உடைத்தனர். இந்த தாக்குதல் சம்பவம் வெள்ளியன்று இரவு 8.15 மணிக்கு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சுங்கச்சாவடியைக் கொள்ளையடிப்பதற்காகவே தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது கம்ப்யூட்டர், கண்ணாடிக் கதவுகள், வாகனத் தடைகள் ஆகியன சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவியில் விவசாயிகள் ஓடிவந்து தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.