இந்தியா

குழந்தையை தத்தெடுக்க இனி இது தேவையில்லை! - நீதிமன்றம் சூப்பர் உத்தரவு

குழந்தையை தத்தெடுக்க இனி இது தேவையில்லை! - நீதிமன்றம் சூப்பர் உத்தரவு

ஜா. ஜாக்சன் சிங்

குழந்தையை தத்தெடுக்க நினைக்கும் தம்பதியருக்கு திருமணச் சான்றிதழ் தேவையில்லை என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ரீனா. திருநங்கையான இவர், தனது ஆண் நண்பரை கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனிடையே, சமீபகாலமாக அவர்களுக்கு குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

இதையடுத்து, குழந்தையை தத்தெடுக்க அனுமதி வழங்கக் கோரி, அவர்கள் வாரணாசி மாவட்ட தாசில்தார் அலுவலகத்தை அணுகியுள்ளனர். அதற்கு, திருமணச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே குழந்தையை தத்தெடுக்க முடியும் என தாசில்தார் அலுவலகம் தெரிவித்துவிட்டது. ஆனால், அவர்களிடம் திருமணச் சான்றிதழ் இல்லை.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி விவேக் வர்மா, "குழந்தைகள் தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான இந்து சட்டம் 1956-இன் படி, தனிநபர் கூட குழந்தையை தத்தெடுக்க அனுமதி இருக்கிறது. அப்படியிருக்கையில், தம்பதியாக வாழ்ந்து வருபவர்கள், குழந்தையை தத்தெடுக்க திருமணச் சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை" என உத்தரவிட்டார்.