இந்தியா

பாலியல் உறவுக்கு இணங்க மறுத்த பெண்ணின் குழந்தையை தீயில் எரிந்த நபர் - பீகாரில் அதிர்ச்சி!

பாலியல் உறவுக்கு இணங்க மறுத்த பெண்ணின் குழந்தையை தீயில் எரிந்த நபர் - பீகாரில் அதிர்ச்சி!

Sinekadhara

பீகாரில் பாலியல் உறவுக்கு இணங்க மறுத்த பெண்ணின் குழந்தையை தீயில் எரிந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் போசஹான் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண் தனது மூன்று மாத கைக்குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே எரிந்துகொண்டிருக்கும் நெருப்பை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்.

அப்போது அங்கு வந்து அமர்ந்த ஒரு நபர் அந்தப் பெண்ணிடன் தவறான நடக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அந்த பெண் அதற்கு இணங்க மறுத்ததுடன், சத்தம் போட்டிருக்கிறார். இதனால் எரிச்சலடைந்த அந்த நபர், பெண்ணின் மடியிலிருந்த 3 மாத பெண்குழந்தையை பிடுங்கி எரிந்துகொண்டிருந்த நெருப்பில் வீசியிருக்கிறார்.

இதனால் அந்தக் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த குழந்தையை மீட்ட அக்கம்பக்கத்தினர் சதார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துவருகின்றனர்.

அந்த பெண்ணின் கணவர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது அதை ஏற்கமறுத்ததால் அவர் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிமீது, இந்திய சட்டபிரிவுகள் 307, 354, 323 மற்றும் 341-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.