இந்தியா

நள்ளிரவு 2 மணிக்கு பீச்சில் உட்கார நெனச்சது தப்பா!.. மும்பை இளைஞரின் வேதனை ட்வீட்!

நள்ளிரவு 2 மணிக்கு பீச்சில் உட்கார நெனச்சது தப்பா!.. மும்பை இளைஞரின் வேதனை ட்வீட்!

JustinDurai

மும்பை கடற்கரை சாலையில் நள்ளிரவில் உட்காருவதற்கு போலீசார் 'கூகுள் பே' மூலம் 2,500 ரூபாய் லஞ்சம் பெற்றதாக ட்விட்டரில் ஒருவர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். 

மும்பையை சேர்ந்த விக்கி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், அதிகாலை 2 மணியளவில் மும்பை கடற்கரை சாலைக்கு சென்றதாகவும், அங்கே உட்கார வேண்டுமெனில் போலீசார் ரூ.2,500 லஞ்சம் கேட்டதாகவும் 'கூகுள் பே' மூலம் தாம் போலீசாருக்கு 2,500 ரூபாய் கொடுத்ததாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் 2,500 ரூபாயை 'கூகுள் பே' மூலம் அனுப்பியதற்கான ஸ்கீரின்ஷாட்டையும் அவர் பகிர்ந்துள்ளார். 

கூகுள் பே' மூலம் போலீசார் 2,500 ரூபாய் லஞ்சம் பெற்றதாக வெளியான பதிவு வேகமாக பரவிய நிலையில், அதுகுறித்து விசாரிப்பதற்காக மும்பை போலீசார் விக்கியின் தொடர்பு விவரங்களை கேட்டுள்ளனர்.