ஆன்லைன் கேம் முகநூல்
இந்தியா

இப்படியெல்லாம் நடக்குமா! ஆற்றில் கரை ஒதுங்கிய தாயின் சடலம்..விசாரணையில் வெளிவந்த உறையவைக்கும் உண்மை!

ஆலையின் கேம்மில் ஏற்பட்ட 4 லட்சம் கடனை தீர்க்க, காப்பீட்டு தொகைக்காக தனது சொந்த தாயையே கொன்ற மகன்.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஆலையின் கேம்மில் ஏற்பட்ட 4 லட்சம் கடனை தீர்க்க, காப்பீட்டு தொகைக்காக தனது சொந்த தாயையே மகன் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் படேக்பூரில் 24 வயதை சேர்ந்த ஹிமான்சு என்ற நபர் ஆன்லை சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் அவரின் பெற்றோர்கள் தொடர்ந்து அவரை இதற்காக திட்டியுள்ளனர். இருப்பினும், ஹிமான்சு தொடர்ச்சியாக விளையாடியுள்ளார்.

இதனால் அவருக்கு 4 லட்சம் கடன் ஏற்பட்டுள்ளது. தன் நண்பர்களிடத்தில் வாங்கிய இந்த கடன் தொகையை திரும்ப செலுத்தியே ஆகவேண்டும் என்று நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால், தனது உறவினர் ஒருவரின் நகையை திருடி பெற்றோர்கள் இரண்டு பேருக்கும் தலா ரூ.50 லட்சம் பதிப்பிலான ஆயுள் காப்பிட்டு பாலிசியை வாங்கியுள்ளார்.

யாரேனும் ஒருவர் இறந்தால்தான், இந்த காப்பீடு தொகை இவரை வந்து சேரும் என்பதை உறுதி செய்த ஹிமான்சு, தன் தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில் தன் தாய் பிரபாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பிறகு இதனை யாரும் அறியாதவண்ணம், தாயின் உடலை ஒரு பையில் கட்டி, டிராக்டரில் அருகில் இருந்த யமுனை நதிக்கரையில் வீசியுள்ளார்.

இதனையடுத்து, சுற்றுலாவிற்காக சென்ற இருந்த தந்தை வீடு வந்து பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லததை அறிந்த அவர், அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். அப்போது, டிராக்டருடன் அருகில் இருந்த நதிக்கரையில் ஹிமான்சுவை பார்த்ததாக சிலர் கூறியுள்ளனர்.

பின்னர் அங்கு சென்று சோதித்து பார்த்ததில் உண்மையை அறிந்து கொண்ட ஹிமான்சுவின் தந்தை, இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். போலீஸ் விசாரணையில், ரூ.4 லட்சம் கடனை அடைக்க காப்பீட்டு தொகை தேவை என்பதால்.. இதனை செய்ததாக குற்றவாளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகமாக ஆன்லையன் கேம் விளையாடியதால் தாய் கடிந்து கொண்டதாலும் இந்த கொலை அரங்கேறியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இப்படி, ஆன்லைகேம் மீது கொண்ட மோகம், பெற்ற தாயையே கொள்ளும் அளவிற்கு இழுத்து சென்றிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.