இந்தியா

பசுக்கன்றை கொன்றவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்த குஜராத் நீதிமன்றம்!

பசுக்கன்றை கொன்றவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்த குஜராத் நீதிமன்றம்!

webteam

தான் வளர்த்த பசுக்கன்றை திருடி  திருமணத்தில் சமைத்துவிட்டதாக ஒருவர் அளித்தபுகாரில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 10 வருடம் சிறைத்தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

குஜராத் மாநில ராஜ்கோட் மாவட்ட நீதிமன்றத்தில் ஒருவர் மனு ஒன்றை அளித்தார். அதில் தான் வளர்த்த வந்த பசுக்கன்றை சலீம் மக்ரானி என்பவர் திருடிவிட்டதாகவும், திருடிய கன்றை வெட்டி திருமணவிழா ஒன்றில் விருந்தாக்கிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி எச்.கே.தேவ் விசாரித்தார். 

சாட்சியங்களின் அடிப்படையில் மக்ரானி குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதாகவும்,  குஜராத் மாநில விலங்குகள் பாதுகாப்பு திருத்தப்பட்ட சட்டத்தின் படி அவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கவேண்டுமென்றும் உத்தரவில் குறிப்பிட்டார்.

குஜராத்தில் பசுவதைக்கு அதிகபட்சமாக 3 வருட சிறைத்தண்டனை விதிக்க சட்டம் இருந்தது. அது திருத்தப்பட்டு தற்போது 7 முதல் 10 வருட சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டது. மக்ரானிக்கு விதிக்கப்பட்ட தண்டனையே விலங்குகள் பாதுகாப்பு திருத்தப்பட்ட சட்டத்தின் படி கொடுக்கப்பட்ட முதல் தண்டனை எனவும் கூறப்படுகிறது