கிருத்தி குமார் முகநூல்
இந்தியா

பெங்களூரு | தங்கும் விடுதிக்குள் திடீரென புகுந்து இளம்பெண்ணை கொன்றுவிட்டு தப்பித்துச்சென்ற மர்ம நபர்

ஜெனிட்டா ரோஸ்லின்

பீகாரை சேர்ந்தவர் கிருத்திகுமார் (22). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். பெங்களூரிவின் கோரமங்களாவில் உள்ள வி.ஆர். லே-அவுட்டில் உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வந்துள்ளார் கிருத்தி.

சம்பவ தினமான கடந்த 19 ஆம் தேதி, சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் கையில் கத்தியுடன், இரவு 11 மணி அளவில் கிருத்தி தங்கியிருக்கும் விடுதியில் வளாகத்தினுள் புகுந்துள்ளார்.

அங்கு மூன்றாவது மாடியில் கிருத்தி குமார் தங்கியிருக்கும் அறையை நோக்கி சென்ற மர்ம நபர், கிருத்தியின் கழுத்தை அறுத்து அவரை கொலைசெய்துவிட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இச்சம்பவத்தில், கிருத்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விடுதியில் தங்கியிருந்த பிற பெண்கள், உடனடியாக இதுகுறித்து கோரமங்களா போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த மும்பையின் தென்கிழக்கு பிரிவு டிசிபி சாரா பாத்திமா தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.

விடுதி சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, கொலைக்கான காரணம் குறித்து தெரியவில்லை என்றபோதும், கிருத்திக்கு தெரிந்தவர்கள்தான் அவரை கொலை செய்திருப்பர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பெண்கள் விடுதிக்குள்ளேயே புகுந்து, இளம்பெண் ஒருவரை மர்மநபர் கொடூரமாக கொலை செய்து தப்பிச்சென்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.