இந்தியா

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் மம்தா - பிரதமருக்கு கடிதம்

webteam

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். 

2014-ம் ஆண்டு முதன் முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி, நிதி ஆயோக் என்ற அமைப்பை உருவாக்கினார். நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் 15-ம் தேதி நடக்க உள்ளது.

இந்த கூட்டத்தில் நீர் மேலாண்மை, விவசாயம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில் முதல் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அதில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் எந்த பலனும் இல்லை எனவும் மாநில அரசுகளுக்கு உதவி செய்யும் எந்த அதிகாரமும் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் பலனில்லை எனவும் தெரிவித்துள்ளார்.