இந்தியா

காங்கிரஸ் விரும்பினால் இணைந்து போட்டி - மம்தா பானர்ஜி அறிவிப்பு

காங்கிரஸ் விரும்பினால் இணைந்து போட்டி - மம்தா பானர்ஜி அறிவிப்பு

Sinekadhara

காங்கிரஸ் கட்சி விரும்பினால் 2024 மக்களவைத் தேர்தலில் இணைந்து போட்டியிடலாம் என மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.

நடந்துமுடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியது. இதனால் காங்கிரஸ் கட்சி துவண்டு போயிருப்பதாக பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சிகளை உற்சாகப்படுத்தும் விதமாக மம்த பானர்ஜி யோசனை ஒன்றை தெரிவித்திருக்கிறார். அதன்படி, காங்கிரஸ் விரும்பினால் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இணைந்து பணியாற்றலாம் என்று கூறியிருக்கிறார். குறிப்பாக சமாஸ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவிற்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறியிருக்கிறார்.

மேலும் 5 மாநில தேர்தல் முடிவுகளைக்கண்டு சோர்வடைய வேண்டாம் எனவும், நேர்மறையாக சிந்தியுங்கள் எனவும் கூறியிருக்கிறார். முதலில் இதை தோல்வியாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும், 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கு இது அடிப்படை என்று தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார். இதற்கிடையே தமிழக முதல்வரும் பாஜகவிற்கு எதிராக தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மும்முரம் காட்டி வருவதையும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.