இந்தியா

காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணிக்கும் மம்தா, மாயாவதி

காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணிக்கும் மம்தா, மாயாவதி

webteam

வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், மம்தாவும் மாயாவதியும் பங்கேற்கமாட்டார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இந்நிலையில், மே 21 ஆம் தேதி டெல்லியில், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

தேசிய கட்சிகளாகன பாஜக மற்றும் காங்கிரஸுக்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்கள் கிடைக்காதபட்சத்தில், மாயாவதியும், மம்தாவும் எடுக்கும் முடிவுகள் அடுத்த ஆட்சியை முடிவு செய்யும் எனக் கூறப்படுகிறது. எனவேதான், அவர்கள் இருவரும் காங்கிரஸ் கூட்டியுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.