இந்தியா

தொடர்ந்து முன்னிலை - காங்கிரஸ் தலைவராகிறார் மல்லிகார்ஜுனா கார்கே?

தொடர்ந்து முன்னிலை - காங்கிரஸ் தலைவராகிறார் மல்லிகார்ஜுனா கார்கே?

webteam

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுனா கார்கே அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி தலைமையில் தொடங்கியது. தேர்தல் அதிகாரிகளான ஜோதிமணி உள்ளிட்டோரும் வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொண்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் அவரை எதிர்த்து களம் கண்ட சசிதரூர் ஆகியோர் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. சசிதரூருக்கு ஆதரவாக கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்டோர் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் வருகை தந்துள்ளனர். காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தொண்டர்கள் கூட்டம் பெரிய அளவில் இல்லை.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுனா கார்கே அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். சுமார் 10,000 வாக்குகள் பதிவான நிலையில் கார்கே சுமார் 6,000 வாக்குகளும், சசிதரூர் சுமார் 1,000 வாக்குகளும் பெற்றுள்ளனர். வாக்குகள் எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.