இந்தியா

இந்த ஆட்டுக்கு என்னதான் நடந்தது? ராஜஸ்தானில் ஓர் அதிசய ஆடு

இந்த ஆட்டுக்கு என்னதான் நடந்தது? ராஜஸ்தானில் ஓர் அதிசய ஆடு

webteam

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரைச் சேர்ந்த ஆண் ஆடு ஒன்றிற்கு பால் சுரக்கும் காம்புகள் இருப்பது கருவிலேயே ஹார்மோன் குறைபாட்டால் நேர்ந்தது என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் அந்த ஆடு 200 முதல் 250 கிராம் பால் வழங்கி வருவது நம்பமுடியாத ஆச்சரியம்.  

ஆட்டுக்கிடா பால் தருவது அந்தப்பகுதி முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. தோல்பூருக்கு அருகிலுள்ள குர்ஜா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜிவ் குஷ்வாஹா. ஆடுகள் வளர்த்துவரும் அவர் அந்த ஆட்டை இரண்டரை வயதுள்ள குட்டியாக வாங்கியுள்ளார்.  

“நாங்கள் வாங்கிய பிறகு ஆறு மாதத்தில் அதற்கு காம்புகள் வளர்வதைப் பார்த்தேன்” என்கிறார் ராஜிவ். சில நாட்களில் அந்த ஆட்டில் இருந்து பால் கரக்க முயற்சி செய்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் கால் லிட்டருக்குக் குறையாமல் பால் கிடைத்துள்ளது. “ஒரு ஆட்டுக்கிடா பால் தருவதை இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன்” என்கிறார் ராஜீவின் பக்கத்து வீட்டுக்காரர் ரூக்மகேஷ்.

இதுபற்றி மருத்துவ ரீதியான விளக்கம் அளித்துள்ள கால்நடை மருத்துவர் கியான் பிரகாஷ் சக்சேனா, “கர்ப்ப காலத்திலேயே ஆண், பெண் பாலினத்தை நிர்ணயிக்கும் ஹார்மோன்கள் தாயின் வயிற்றில் சமமாக இருந்தால், ஆண் பெண் பாலின உறுப்புகள் மற்றும் இரண்டாம் நிலை பாலியல் கேரக்டர்களை உருவாக்குகிறது” என்றும் “இதுபோன்ற அதிசயங்கள் லட்சத்தில் ஒன்றுதான் நடக்கும்” என்றும்  வியப்பு தெரிவித்துள்ளார்.