இந்தியா

கேரளாவில், மலையாளப் பாடம் கட்டாயமாகிறது

webteam

கேரளாவில் அனைத்துப் பள்ளிகளிலும் மலையாள மொழியைக் கட்டாயப் பாடமாக்குவதற்கான அவசர சட்டத்துக்கு ஆளுநர் சதாசிவம் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் படி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மத்திய அரசின் பாடத்திட்டத்தில் இயங்கக்கூடிய சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் மலையாள மொழிப் பாடம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் இந்த அவசரச் சட்டம் வகை செய்கிறது. சில பள்ளிகள் மலையாள மொழியை கட்டாயப் பாடமாக வைத்திருக்காதது அரசின் கவனத்துக்கு வந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.