இந்தியா

அழிந்து வருகிறதா குருவிகள்? - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் விளக்கம்

அழிந்து வருகிறதா குருவிகள்? - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் விளக்கம்

webteam

இந்தியாவில் குருவிகள் மற்றும் தேனீக்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக குறைந்து வருவதாகவும், இருப்பினும் அவை அழிந்து வருவதாக சொல்ல முடியாது என்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். 

அண்மையில் ரஜினி நடித்த  ‘2.0’ திரைப்படத்தில் செல்போன் கதிர்வீச்சால் பறவைகள் அழிந்து வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. செல்போன் டவர்களால் குருவி இனங்கள் அழிந்து வருவதாக குறிப்பிடுவது உண்மையா என்று அவை விவாதப் பொருளாக மாறியது.

இந்நிலையில், இந்தியாவில் குருவிகள் மற்றும் தேனீக்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக குறைந்து வருவதாகவும், இருப்பினும் அவை அழிந்து வருவதாக சொல்ல முடியாது என்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். 

94 பாலூட்டிகள், 89 பறவையினங்கள், 54 வகையான ஊர்வன இனங்கள், 228 வகையான மீன் இனங்கள், 75 வகையான நீர்நில வாழினங்கள்ஆகியவை அபாயகரமான கட்டத்தில் உள்ளதாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது என்று மகேஷ் சர்மா கூறியிருக்கிறார். 

வன உயிரினங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாக்கவும், அழிவில் இருந்து மீட்டெடுக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.