இந்தியா

இடஒதுக்கீடு போராட்ட இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற மகாராஷ்டிர அரசு பரிந்துரை

இடஒதுக்கீடு போராட்ட இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற மகாராஷ்டிர அரசு பரிந்துரை

jagadeesh

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் கைதான சுமார் 3 ஆயிரம் பேர் மீதான வழக்குகளை ரத்து செய்யுமாறு முதல்வர் உத்தவ் தாக்கரே பரிந்துரைத்துள்ளார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பல்வேறு அரசியல் விளையாட்டுக்கு பின்பு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் மகாராஷ்டிரா முதல்வராக அண்மையில் பதவியேற்றார். முதல்வராக பதவியேற்ற பின்னர், பல்வேறு முடிவுகளை உத்தவ் தாக்கரே எடுத்து வருகிறார். முன்னதாக, கோர்கான் பீமா சம்பவம் தொடர்பான பட்டியலினத் தலைவர்கள் மீதான வழக்குகள் அனைத்து வாபஸ் பெறப்படும் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, தற்போது மராத்தா இன மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது நேர்ந்த வன்முறை நிகழ்வுகளில் தொடர்புடையதாக கைதான சுமார் 3000 பேரை விடுவிக்க பரிந்துரைத்துள்ளார்.

அந்த உத்தரவில் கீழமை நீதிமன்றங்களுக்கு அளித்துள்ள பரிந்துரைகளை சுமார் 3000 மராத்தா இளைஞர்கள் மீது பதிவான 288 வழக்குகளை முடித்துவைக்குமாறு குறிப்பிட்டிருக்கிறார். மேலும் 35 வழக்குகளில் பொதுச்சொத்துக்குச் சேதம் ஏற்படுத்தியது மற்றும் போலீசாரைத் தாக்கியது போன்ற குற்றங்களுக்கு தெளிவான ஆதாரம் உள்ளது. இதனால் அவற்றைத் தள்ளுபடி செய்வது அவ்வளவு எளிதானது அல்ல எனத் தெரிகிறது. மற்ற வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் "மராத்தா போராட்டம், பீமா கோரேகான் கலவரம் ஆகியவற்றில் சிசிடிவி வீடியோ பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் இருக்கின்றன. அந்த வழக்குகளை வாபஸ் பெறுவது இயலாது. மேலும், அது நீதிமன்றத்துக்கு உட்பட்ட விஷயம்" என்று மகாராஷ்டிரா காவல்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.