இந்தியா

மகாராஷ்டிராவில் 20-வது முறையாக கர்ப்பம் தரித்த பெண்..!

மகாராஷ்டிராவில் 20-வது முறையாக கர்ப்பம் தரித்த பெண்..!

webteam

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் 20-ஆவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட்(Beed) மாவட்டத்தை சேர்ந்தவர் லங்காபாய் காராட்(38). இவருக்கு ஏற்கெனவே 11 குழந்தைகள் உள்ளனர். இதுமட்டுமில்லாமல் 5 குழந்தைகள் பிறந்த ஒருவரிடத்திற்குள் இறந்துள்ளனர். மேலும் மூன்று முறை தானாகவே கரு கலைந்துள்ளது.

இந்தச் சூழலில் தற்போது 20-ஆவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார். இதுகுறித்து அந்த மாவட்டத்திலுள்ள மருத்துவர் அசோக் தொரட், “ஏற்கெனவே இந்தப் பெண்ணிற்கு 11 குழந்தைகள் உள்ளனர். தற்போது மீண்டும் இந்தப் பெண் 20/ஆவது முறையாக கருவுற்றுள்ளார். அவர் கருவுற்றவுடன், மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டது. தாயும் குழந்தையும் நன்றாக உள்ளனர். அவருக்கு சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் அவரை சுகாதார இடத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது தான் அவரது முதல் மருத்துவமனை பிரசவமாகும். இதற்கு முன்பு அவருடைய பிரசவங்கள் அனைத்தும் வீட்டிலேயே பார்க்கப்பட்டது. இம்முறை பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்களை தடுக்க அவரை மருத்துவமனையில் பிரசவம் பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். இவர் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இவருக்கு ஏற்கெனவே அதிக முறை பிரசவம் நடந்துள்ளதால், இவரது கர்ப்பபை வலு இழந்துள்ளது. ஆகவே இம்முறை பிரசவத்தின் போது இரத்தப் போக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தான் அவரை மருத்துவமனையில் பிரசவம் பார்க்க வலியுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.