இந்தியா

மகாராஷ்டிராவில் அமைச்சரவை பகிர்வு முடிவுக்கு வந்தது என தகவல் !

மகாராஷ்டிராவில் அமைச்சரவை பகிர்வு முடிவுக்கு வந்தது என தகவல் !

jagadeesh

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே அமைச்சரவை பகிர்வு தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் நிலையில், மும்பையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அவரது மகள் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் சிவசேனாவில் உத்தவ் தாக்கரேவுக்கு முதல்வர் பதவியும், 15 பேருக்கு அமைச்சர் பதவிகளும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு துணை முதலமைச்சர் பதவியும், மேலும் 13 பேருக்கு அமைச்சர் பதவிகளும் வழங்கப்படும் எனத் தெரிகிறது. பேரவையின் சபாநாயகர் பொறுப்புக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் நியமிக்கப்படுவார் என்றும் அக்கட்சியைச் சேர்ந்த 13 பேருக்கு அமைச்சர் பதவிகள் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.