மகாராஷ்டிரா மாநிலம் கான் டோம்பிவ்லியின் நில்ஜே கிராமத்தின் லோதா பகுதியில் பழங்கள் விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வருபவர், அலி கான் (20). இந்த நிலையில், தன்னுடைய பழ வண்டியில் அணைந்தபடியே, பிளாஸ்டிக் பை ஒன்றில் சிறுநீர் கழிக்கிறார். பின், அவர் கைகளைக் கழுவாமல் அப்படியே பழங்களை விற்பனை செய்யும் பணியில் ஈடுபடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே, உள்ளூர்வாசிகள் கானின் பழக் கடையில் கூடியது.
மேலும், ஆத்திரத்தில் அவரையும் பழ வண்டியையும் அம்மக்கள் தாக்கியுள்ளனர். தொடர்ந்து இந்தச் செய்தி கிடைத்ததும், ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) அமைப்பினர் அங்கீகரிக்கப்படாத வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்தது. மேலும், இவ்விவகாரம் தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அலி கான் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.