தேவேந்திர ஃபட்னாவிஸ் pt web
இந்தியா

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல்: 99 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

மகாராஷ்டிராவில் 99 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாரதிய ஜனதா அறிவித்துள்ளது.

PT WEB

மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 20ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் 99 வேட்பாளர்களின் பெயர்களை பாஜக முதற்கட்டமாக அறிவித்துள்ளது. இவர்களில் 71 பேர் ஏற்கனவே பேரவை உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஆவர். 3 பேருக்கு மட்டும் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபத்னவிஸ், சபாநாயகர் ராகுல் நர்வேகர், அமைச்சர்கள் கிரிஷ் மகாஜன், சுதிர் முங்கந்திவார், மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே உள்ளிட்டோர் பெயர்கள் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

ஆளும் மகாயுதி கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு முறையாக அறிவிக்கப்படாத நிலையில் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. எனினும் பாஜக 150 இடங்களிலும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மீதமுள்ள இடங்களிலும் போட்டியிடக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.