இந்தியா

“சைக்கிள் இல்லனா பேருந்து...”கிராமங்களுக்கு தேடிச்சென்று மருத்துவம் பார்க்கும் மருத்துவர்

EllusamyKarthik

மகாராஷ்டிராவின் சந்த்ரபூர் மாவட்டத்தில் உள்ள மல் டவுனை சேர்ந்தவர் 87 வயதான மருத்துவர் ராமச்சந்திரா தண்டேகர்.

ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவரான அவர் கடந்த 1959 முதல் மல், போம்பர்னா, பல்லர்ஷா மாதிரியான தாலுகாவில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு நேரடியாக அந்த கிராமத்திற்கே சென்று மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

கொரோனா பொது முடக்க சமயத்திலும் தன் மருத்துவ பணியை விடாமல் கிராமங்களுக்கு சென்று மருத்துவம் பார்த்துள்ளார் அவர்.

“நான் எனது அன்றாட பணிகளை தான் செய்து வருகிறேன். இதில் ஒன்றும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் எந்தெந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்பதை டைம் டேபிள் போட்டு மருத்துவ சேவை செய்வதாக சொல்லியுள்ளார் அவரது மகன். 

நீண்ட தூரம் என்றால் பேருந்திலும், அருகாமையில் என்றால் சைக்கிளிலும் ராமச்சந்திரா செல்வது வாடிக்கையாம்.

ஒவ்வொரு கிராமத்திலும் இருபது வீடுகளுக்கு அப்பா மருத்துவம் பார்ப்பார் எனவும் அவரது மகன் தெரிவித்துள்ளார்.