மகாராஷ்டிரா எக்ஸ் தளம்
இந்தியா

தலைமைச் செயலகத்தின் 3-வது மாடியில் இருந்த குதித்த துணை சபாநாயகர்.. மகாராஷ்டிராவில் பரபரப்பு!

Prakash J

மகாராஷ்டிராவில் பாஜக துணையுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி ஆட்சியில் உள்ளது. விரைவில் இம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வர இருக்கிறது. இந்த நிலையில் தங்கர் சமூகத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4 பேர் தலைமைச் செயலகத்தின் மாடியில் இருந்தது குதித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் மற்றும் மூன்று எம்.எல்.ஏக்கள், மந்திராலயா என்று அழைக்கப்படும் மகாராஷ்டிர தலைமைச் செயலகத்தின் 3வது மாடியில் இருந்து குதித்தனர். தற்கொலை முயற்சிகளைத் தடுப்பதற்காக, கடந்த 2018-ல் அமைக்கப்பட்ட வலையில் விழுந்ததால் அவர்கள் காயமின்றி தப்பித்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க: ‘இளமைக்கு போலாம் வாங்க...’ - இஸ்ரேல் Time Machine எனக்கூறி ரூ.35 கோடி மோசடி.. தலைமறைவான உ.பி. ஜோடி!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பிரிவைச் சேர்ந்த ஜிர்வால் மற்றும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கர் சமூகத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து மந்த்ராலயாவிலிருந்து குதித்தனர். தங்கர் சமூகத்தை பழங்குடியின பிரிவில் சேர்க்க அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட அமைச்சரவைக் கூட்டத்தில் சில பழங்குடியின எம்எல்ஏக்கள் மந்திராலயா வளாகத்தில் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் உள்ள தங்கர் சமூகம் தற்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) பிரிவில் உள்ளது. அச்சமூகத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கக்கோரி சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பந்தர்பூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் உள்ள தங்காட் இனத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் சமூகம் என்று தங்கர் சமூகத்தைச் சேர்ந்தது எனக் கூறி வருகின்றனர்.

இதையும் படிக்க: 4 மாத சம்பளம் பாக்கி| பாதிப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள்.. காரணம் என்ன?