video image x page
இந்தியா

மகாராஷ்டிரா| தொடரும் மாரடைப்பு மரணங்கள்|ஜிம்மில் பயிற்சிசெய்த தொழிலதிபர் சுருண்டுவிழுந்து உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் தொழிலதிபர் ஒருவர், உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த நிலையிலேயே, தரையில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நபர்கள், சமீபகாலமாக எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இளைஞர்கள்கூட மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

அதிலும் குறிப்பாக, மாரடைப்பு காரணமாக 16 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட இளம் வயது மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில், மகாராஷ்டிராவில் தொழில் அதிபர் ஒருவர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த நிலையில் திடீரென தரையில் சுருண்டு விழுந்து உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு மசோதா|எதிர்ப்பு தெரிவித்த PhonePe இணை நிறுவனர் திடீர் மன்னிப்பு!

இந்தச் சம்பவம், கடந்த ஜூலை 20-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சீமான் மோட்டார்ஸ் உரிமையாளரான கவல்ஜித் சிங் பக்கா என்பவர் வழக்கம்போல் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று பயிற்சியில் ஈடுபட்டார். பின்னர், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நிலையிலேயே, அவர் திடீரென சுருண்டு விழுந்து சில நிமிடங்களில் உயிரிழந்தார்.

அவர் ஜிம்மில் சரிந்த பிறகு உடனிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த காட்சிகள் ஜிம்மில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: தொலைதூர காதல்| புது மனைவிக்காக தினமும் 320 கி.மீ. பயணிக்கும் சீன இளைஞர்