இந்தியா

பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பாஜக தலைவர் கைது

பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பாஜக தலைவர் கைது

webteam

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணிற்கு வலுக்கட்டயமாக முத்தம் கொடுத்த பாஜகவைச் சேர்ந்த தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பாஜக தலைவர் ரவீந்திர பவந்தடே. இவர், கடந்த மாதம் 27 ஆம் தேதி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென அவர் அருகில் இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். தொடர்ந்து அவர், அப்பெண்ணுக்கு வலுக்கட்டயமாக முத்தம் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த சக பயணி ஒருவர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து அது சமூக வலைதளங்களிலும் பரவியது. இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.