மகாராஷ்டிரா எக்ஸ் தளம்
இந்தியா

மகாராஷ்டிரா | ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

Prakash J

மகாராஷ்டிராவில் பாஜக துணையுடன் சிவசேனாவில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் பதவிக்காலம், நவம்பர் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் இன்று (நவம்பர் 20) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, 288 தொகுதிகளைக் கொண்ட மகராஷ்டிரா சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. தேர்தல் தொடக்கம் முதலே காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடிக்கும், பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.

  • மஹாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 81 இடங்களிலும், துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.

  • மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 95 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 86 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.

இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி மகாராஷ்டிராவில் பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது. 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை.

இதையும் படிக்க:

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

சி.என்.என்.

பாஜக கூட்டணி (மஹாயுதி) 154

காங்கிரஸ் கூட்டணி (மகா விகாஸ் அகாடி) 128

மற்ற கட்சிகள் 6

பீப்பிள்ஸ் பல்ஸ்

பாஜக கூட்டணி (மஹாயுதி) 175-195

காங்கிரஸ் கூட்டணி (மகா விகாஸ் அகாடி) 85-112

மற்ற கட்சிகள் 7-12

மேட்ரிஸ்

பாஜக கூட்டணி (மஹாயுதி) 150-170

காங்கிரஸ் கூட்டணி (மகா விகாஸ் அகாடி) 110-130

மற்ற கட்சிகள் 8-10

பி-மார்க்

பாஜக கூட்டணி (மஹாயுதி) 137-157

காங்கிரஸ் கூட்டணி (மகா விகாஸ் அகாடி) 126-146

மற்ற கட்சிகள் 2-8

சாணக்யா

பாஜக கூட்டணி (மஹாயுதி) 152-160

காங்கிரஸ் கூட்டணி (மகா விகாஸ் அகாடி) 130-138

கருத்துக்கணிப்பு டைரி

பாஜக கூட்டணி (மஹாயுதி) 122-186

காங்கிரஸ் கூட்டணி (மகா விகாஸ் அகாடி) 69-121

மற்ற கட்சிகள் 12-29

ஏபிபி நியூஸ்

பாஜக கூட்டணி (மஹாயுதி) 141-172

காங்கிரஸ் கூட்டணி (மகா விகாஸ் அகாடி) 103-129

மற்ற கட்சிகள் 1-4

- இடங்களை பிடிக்குமென கணிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: ஏ.ஆர்.ரஹ்மான் வைத்த கோரிக்கை... ஐயப்ப மாலையுடன் தர்கா சென்ற ராம் சரண்! எதிர்வினைக்கு உபாசனா பதில்!