மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தற்போது (8 மணியளவில்) வாக்கு எண்ணிக்கையானது தொடங்கியுள்ளது.
288 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக முடிவடைந்தது. இதேபோல 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில், நவம்பர் 23 ஆம் தேதியான இன்று காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கையானது இரண்டு மாநிலங்களிலும் தொடங்கியுள்ளது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தபால் வாக்குகள் முடிவடைந்த நிலையில் மின்னணு வாக்குகள் எண்ணப்படும்.
இதன்காரணமாக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில், துணை ராணுவப் படையினரும், காவல்துறையினரும் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை 8.45 நிலவரப்படி,
மகாராஷ்டிரா (288 தொகுதிகள்)
பாஜக கூட்டணி: 59
காங்கிரஸ் கூட்டணி: 31
பிற 2
ஜார்கண்ட் (81 தொகுதிகள்)
பாஜக கூட்டணி: 25
ஜெஎம்எம் கூட்டணி: 10
பிற 0
மகாராஷ்டிராவில் 66.05% வாக்குகளும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலில் 68% வாக்குகள் பதிவான நிலையில் 2ஆம் கட்டமாக நேற்று நடைபெற்ற தேர்தலில் 66% வாக்குகள் பதிவாகின.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + காங்கிரஸின் I-N-D-I-A கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) 41 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 6 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) 4 இடங்களிலும் போட்டியிட்டன.
பாஜக 68 இடங்களிலும்,
அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏஜேஎஸ்யு) 10 இடங்களிலும்,
ஜனதா தளம் (ஐக்கிய) 2 இடங்களிலும்,
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 1 இடத்திலும் போட்டியிட்டன.
காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ’மகா விகாஸ் அகா’ டிக்கும், பாஜக அங்கம் வகிக்கும் ’மஹாயுதி’ கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.
மஹாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 81 இடங்களிலும், துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.
மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 95 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 86 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.