Maharashtra-Jharkhand PT Web
இந்தியா

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு சதவீதங்கள்!

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு சதவீதங்கள் குறித்த முதல் கட்ட மதிப்பீடுகள் வெளியாகியுள்ளன.

PT WEB

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு சதவீதங்கள் குறித்த முதல் கட்ட மதிப்பீடுகள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 288 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 65% வாக்குகள் பதிவானதாக தெரியவந்துள்ளது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிக்க கட்சிரோலி மாவட்டத்தில் அதிகபட்சமாக 69.6% வாக்குகள் பதிவாகியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Maharashtra, Jharkhand

அதே நேரம் நாட்டின் நிதித் தலைநகரமாக திகழும் மும்பையில் உள்ள 36 தொகுதிகளிலும் 54% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலில் 68% வாக்குகள் பதிவான நிலையில் 2ஆம் கட்டமாக நேற்று நடைபெற்ற தேர்தலில் 66% வாக்குகள் பதிவாகின.

பிரியங்கா காந்தி போட்டியிட்ட வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் 64.72% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கடந்த முறை ராகுல் காந்தி போட்டியிட்ட போது 73.52% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.