இந்தியா

மகாராஷ்டிரா: சாமியார்களை கண்மூடித்தனமாக அடித்து உதைத்த கிராம மக்கள்! காரணம் என்ன?

webteam

மகாராஷ்டிராவில் சிறார்களைக் கடத்துவதாகக் கருதி 4 சாமியார்களை பொதுமக்கள் கண்மூடித்தனமாக தாக்கினர்.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவிலிருந்து வந்த அந்த சாமியார்கள், மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி (Sangli) மாவட்டம் லவங்கா என்ற கிராமத்தில் உள்ள கோவிலுக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து பிற கோவில்களுக்கு புறப்பட்ட சாமியார்கள், தங்களுக்கு பணிவிடை செய்ய சிறார்களை அனுப்புமாறு கிராமத்தினரிடம் கேட்டுள்ளனர்.

இதில் ஆவேசமுற்ற கிராமத்தினர், உடல் உறுப்புகளுக்காக சிறார்களை சாமியார்கள் கடத்த நினைப்பதாகக் கருதி அவர்களை வாகனத்திலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துப் போட்டு தாக்கினர். பெல்ட்டைக் கொண்டும் நீளமான கம்புகளை கொண்டும் தாக்கினர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பெலகாவி மாவட்டத்தில் கடத்தல் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று எஸ்பி சஞ்சீவ் பாட்டீல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும் சந்தேகத்திற்கிடமான ஏதேனும் ஒன்றைக் கண்டால் 112 (போலீஸ் ஹெல்ப்லைன்) ஐ தொடர்பு கொள்ளுமாறு மக்களை வலியுறுத்தினார். சாங்லி எஸ்பி தீக்ஷித் கெடம், "எங்களுக்கு எந்த புகாரும்/முறையான அறிக்கையும் வரவில்லை. ஆனால் வைரலான வீடியோக்கள் மற்றும் உண்மைகளை சரிபார்த்து வருகிறோம். தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.