மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் ரயிலில் பயணம் செய்த 50 சிறுமிகளை காவல் நிலையம் அழைத்துச் சென்று நள்ளிரவு 2:30 மணி வரை போலீசார் விசாரணை நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில், நாக்பூரிலிருந்து குஜராத் சென்ற 50 சிறுமிகளை மதம் மாறச் செல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ரயிலில் இருந்து இறக்கி காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டனர். ஞாயிறு இரவு 7:00 மணிக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அச்சிறுமிகளை தரையில் அமர வைத்து நள்ளிரவு 2:30 மணி வரை போலீசாரும், அதிகாரிகளும் விசாரணை நடத்தியுள்ளனர். 12 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுள்ள அச்சிறுமிகள் புத்தாடைகள் அணிந்து மகிழ்ச்சியாக ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு அடிப்படைவாதக் குழு ரயிலில் சிறுமிகள் மதமாற்றம் செய்ய அழைத்துச் செல்லப்படுவதாக அளிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அனைவரும் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். இரவு 2:30 மணிக்கு மேல் சிறுமிகள், காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.