முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் Facebook
இந்தியா

பெண்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் - வாக்குறுதிகளை அள்ளி வீசிய ம.பி முதல்வர் சௌகான்

மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் ஆயிரத்து 250 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும், இதை சிறிது சிறிதாக உயர்த்தி 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார்.

PT WEB

மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் ஆயிரத்து 250 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும், இதை சிறிது சிறிதாக உயர்த்தி 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் பெண்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

அதன்படி, 450 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் எனவும், இதனை நிரந்தரமாக செயல்படுத்த திட்டம் வகுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். அரசு பணியில் பெண்களுக்கு உள்ள 30 விழுக்காடு இட ஒதுக்கீடு 35 விழுக்காடாக அறிவிக்கப்படும் என்றும், அதுவே ஆசிரியர் பணியிடங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு 50 விழுக்காடாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம்

இதனிடையே மத்திய பிரதேசத்தில் மூழ்கும் கப்பலாக உள்ள பாஜகவை காக்க முதல்வர் பல்வேறு சலுகைகளை வழங்கியிருப்பதாக காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வர் கமல்நாத் விமர்சித்துள்ளார். மேலும் பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய், சமையல் எரிவாயு சிலிண்டரை 500 ரூபாய்க்கு வழங்குவது, 100 யூனிட் வரை இலவச மின்சாரம், உள்ளிட்டவை காங்கிரசின் வாக்குறுதிகள் என குறிப்பிட்டுள்ளார்.