17 பேர் விடுதலை ட்விட்டர்
இந்தியா

“வேண்டுமென்றே போலியான புகார்” - பாக். வெற்றியை கொண்டாடியதாக கைதான 17 ம.பி இஸ்லாமியர்கள் விடுதலை!

கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியதாக மத்தியப் பிரதேசத்தில் 17 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை இன்று நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

Prakash J

தேசத் துரோக வழக்கின் கீழ் 17 இஸ்லாமியர்கள்  கைது

கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியதாக மத்தியப் பிரதேசத்தில் 17 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை இன்று நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

icc champions 2017

2017, ஜூன் 18ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல்முறையாகக் கோப்பையைத் தட்டிச் சென்றது. இந்த வெற்றியை மத்தியப் பிரதேச மாநிலம் மொஹட் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வெற்றி முழக்கங்களை எழுப்பி, இனிப்புகளை விநியோகித்ததாகவும், பட்டாசுகளை கொளுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின. அதன்பேரில், அந்த கிராமத்தைச் சேர்ந்த 17 இஸ்லாமியர்கள் மற்றும் 2 சிறுவர்கள் மீது வழக்கு பதியப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள்மீது 1860இன் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் தேசத்துரோகம் மற்றும் கிரிமினல் சதி செய்ததாகக் வழக்கு பதியப்பட்டது.

இதையும் படிக்க: குஜராத்: ராஜினாமா கடிதம் அனுப்பிய பாஜக எம்.எல்.ஏ.. பேட்டியில் சொன்ன வித்தியாசமான காரணம்!

வழக்கில் ஆதாரங்களைக் காட்ட முடியாமல் திணறிய காவல்துறை

ஆனால், இந்த வழக்கில் காவல் துறையினரால் ஆதாரங்களைக் காட்ட முடியவில்லை. இதையடுத்து இந்த வழக்கில், உண்மையில்லை எனவும் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் விசாரணை நடத்திய நீதிமன்றம் தெரிவித்ததுடன், அவர்களையும் விடுதலை செய்துள்ளது. முன்னதாக, முஸ்லிம் ஆண்கள் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள், போலீசாரின் அழுத்தத்தினாலேயே வைக்கப்பட்டுள்ளது என புகார் அளித்தவரும், அரசு வழக்கறிஞரும் தெரிவித்திருந்தனர்.

17 இஸ்லாமியர்களையும் விடுதலை செய்த நீதிமன்றம்

இதனை தொடர்ந்து தற்போது அது ஜோடிக்கப்பட்ட வழக்கு எனக்கூறி நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது. கைது, சிறை, போலீசாரின் தாக்குதல், தேசத்துரோகிகள் என அவதூறு என எல்லாவற்றையும் சுமந்த அவர்கள், விடுதலை ஆக 7 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த 17 பேரில் 2 குழந்தைகளுக்கு தந்தையான ஒருவர், 2019ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அதுபோல் சிறார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த 2 சிறுவர்களும் கடந்த, 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் அவர்களுடைய கல்விக்கனவு தொலைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டபோதிலும், அவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை.

இதையும் படிக்க: அண்ணன் மகனுக்கு சீட்: பாஜக மீது அதிருப்தி.. ராஜினாமா செய்த அமைச்சர்.. யார் இந்த பசுபதி குமார் பராஸ்?

மொஹட் கிராமத்தில் நடப்பது என்ன?

இச்சம்பவத்திற்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டியை, டிவியில்கூட ஊர் மக்கள் யாரும் பார்ப்பது இல்லை என அக்கிராமத்தின் தலைவர் கூறியுள்ளார்.

சிறை

மத்தியப் பிரதேசம் - மகாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில், மொத்தம் 4,000 குடும்பங்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது. இதில் பட்டியல் இனம் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இஸ்லாமிய மக்களும் அங்கே ஓரளவு வசிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்களாகவே உள்ளனர். சாதாரண வழக்குகளுக்காகக்கூட இங்குள்ள முஸ்லிம்கள் மீது காவல் துறையினர் அதிகளவில் தாக்குதல் நடத்துவதாகவும் சிறையில் அடைப்பதாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் அவர்களை தேசத் துரோகிகளாகக் காவல் துறையினர் சித்தரிப்பதாக அக்கிராம மக்கள் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ”நீங்க அப்படி கூப்பிடுவது எனக்கு கூச்சமா இருக்கு” - ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட விராட் கோலி!