அனுராக் தாக்கூர் pt web
இந்தியா

உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் குறைப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது.

PT WEB

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் அடுப்பு மற்றும் முதல் சமையல் எரிவாயு இலவசமாக அளிக்கப்படுகிறது. அதன்பிறகு பயனாளிகள் தங்களுக்கு தேவையான எரிவாயு உருளைகளை அவர்களாகவே வாங்கிக்கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலில் சமீபத்தில் ரக்‌ஷா பந்தன் பண்டிகைக்கு முன்பாக உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு உருளைக்கு 200 ரூபாய் மானியம் என மத்திய அரசு முடிவு செய்தது. இதன்மூலம் உருளையின் விலை ரூ.200 குறைந்தது. தற்போது மானியத்தை 300 ரூபாயாக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முடிவு இன்று பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு சமையல் எரிவாயுவின் விலை மேலும் 100 ரூபாய் குறையும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். தேர்தல் வரும் சூழலில் மேலும் ஒரு சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.