வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் கணித்திருக்கிறது. புதிதாக உருவாகும் புயலுக்கு பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் பெயர் வைக்கப்படுகிறது. வடமேற்கு திசையை நோக்கி நகரும் ’குலாப்’ புயல் ஒடிசா - வடக்கு ஆந்திரா இடையே 26ஆம் தேதி மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.