ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை மறுவிற்பனையால் வருவாய் இழப்பு? என நாடாளுமன்றத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திருமாவளவன் கேள்வி எழுப்பிய நிலையில் அவரது கேள்விக்கு தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் தேவுசிங் சவுகான் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பான செய்தி அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளது :
“வினாவும் விடையும்
Revenue loss due to reselling of spectrum
1)தொலைதொடர்பு நிறுவனங்கள் அரசு வழங்கிய ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமத்தை அந்த நிறுவனங்களுக்கிடையே மறு விற்பனை செய்ய அரசு அனுமதிப்பதால் ஏற்படக்கூடிய வருவாய் இழப்பு பற்றி அரசு ஏதேனும் ஆய்வு மேற்கொண்டுள்ளதா?
2) ஆய்வு மேற்கொண்டிருந்தால் அதன் விவரங்கள் 3) ஆய்வு மேற்கொள்ளவில்லை எனில் அதுபோன்ற ஆய்வு மேற்கொள்ள அரசிடம் திட்டம் ஏதேனும் உள்ளதா?
4) அரசின் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலத்திலும் தொடர்ச்சியாக மறு விற்பனையிலும் தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கிடையே கூட்டணி அமைத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் வழிமுறை திட்டம் ஏதேனும் அரசிடம் உள்ளதா? நாடாளுமன்றத்தில் மேற்கண்ட எனது கேள்விகளுக்கு தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் தேவுசிங் சவுகான் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் "TRAI-ன் (இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு முகமை) பரிந்துரைகளின் அடிப்படையில் ஒன்றிய அரசு அலைவரிசை விற்பனை தொடர்பாக வழிகாட்டுதல்களை 12.10.2015 அன்று வெளியிட்டுள்ளது.
அது தொடர்பான விளக்கங்களை 12.5.2016 அன்று வழங்கியுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் அரசுக்கு வரவேண்டிய உரிய வருவாய் நலனை பாதுகாக்கும் வகையில் வழங்கப்பட்டிருக்கிறது. ஒற்றை அமைப்பாக ஒரு உரிமத்தை வைத்திருக்கும் நிறுவனங்கள் மற்றொரு ஏலத்தில் பங்கேற்பதை தடுக்கும் வகையினும் விரிவான விதிகள் வகுக்கப்பட்டிருக்கிறது
மேலும், 'ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை அணுகல் வர்த்தகம்’ வழிகாட்டுதல்களின் படி தொலைதொடர்பு சேவை வழங்கும் (TSP) ஒரு நிறுவனம் அதன் அலைக்கற்றை உரிமையினை உரிமம் பெற்ற நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் விற்பனை செய்ய வழிவகை செய்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.