வெளிநாட்டிலிருந்து போலி சுற்றுலா இணையதளங்களை உருவாக்கி மோசடி செய்யும் வடமாநில நபரொருவருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
கடந்த 17-ஆம் தேதி தேவராஜ் சிங் மற்றும் ஷ்ரவன் சிங் என்ற இரண்டு பேரைக் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அகமதாபாத்திலிருந்து கைது செய்து சென்னை சிறையில் அடைத்தனர். இந்த கும்பலின் தலைவராக செயல்பட்டுவந்த திலீப் சிங் என்பவர் தாய்லாந்தில் இருந்தபடி இந்தியாவில் உள்ளவர்களை மோசடி செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தாய்லாந்தில் தலைமறைவாக இருக்கும் திலீப் சிங்கிற்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். இது தொடர்பாக தாய்லாந்து தூதரகத்தின் உதவியையும் காவல்துறையினர் நாடியுள்ளனர்.
தொடர்புடைய செய்தி: பயனர்களின் தகவல்கள் கசியும் ஆபத்தில் இருந்த ஐஆர்சிடிசி: அலெர்ட் செய்த சென்னை மாணவர்