மம்தா, அபிஷேக் பானர்ஜி pt web
இந்தியா

மக்களவை சபாநாயகர் தேர்தல்: INDIA கூட்டணியில் முரண்பாடுகளா? திரிணமூல் காங்கிரஸ் சொல்வதென்ன?

PT WEB

18 ஆவது மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று எம்.பிக்களாக தற்காலிக சபாநாயகரால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் துணை சபாநாயகர் பதவி தரவில்லை என்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தெரிவித்திருந்தது. அதேவேளையில், சபாநாயகர் தேர்தலில் INDIA கூட்டணி சார்பில் கே. சுரேஷ் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டார். வேட்புமனுவையும் இன்று காலை அவர் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் சபாநாயகர் தேர்தலில் வேட்பாளராக சுரேஷ் முன்னிறுத்தப்பட்டது தொடர்பாக, கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் ஆலோசிக்கவில்லை என திரிணமூல் காங்கிரஸ் எம்பியான அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். எந்த ஒரு ஆலோசனையும் இன்று சுரேஷை வேட்பாளராக தேர்வு செய்துள்ளனர் என்றும் இது துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என்றும் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் தேர்தலில் INDIA கூட்டணி வேட்பாளர் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்பி தெரிவித்துள்ள கருத்து, கூட்டணிக்குள் முரண்பாடுகள் இருப்பதை காட்டுவதாக தெரிவிக்கின்றனர். கூட்டணியில் உள்ள மற்றக் கட்சியினர் இதுதொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.