நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கடந்த 18ஆம் தொடங்கியது. இந்தச் சிறப்புக் கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் நேற்றும், இன்றும் நடைபெற்று வந்தது. இன்று முழுக்க இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், தற்போது மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.