இந்தியா

தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேறியது

தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேறியது

rajakannan

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேறியது.

மருத்துவ கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையிலான தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மக்களவையில் கடந்த வாரம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தாக்கல் செய்தார். இந்த மசோதாவின் படி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவரப்படும். அந்த ஆணையத்துக்கு பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக மருத்துவ ஆலோசனை குழு அமைக்கப்படும்.

இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேபோல், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் அதிமுக தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை அதிமுக எதிர்பதாக மக்களவையில் ரவீந்திரநாத் குமார் எம்.பி தெரிவித்துள்ளார். தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஏழை மக்களுக்கு எதிரானது என்று திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்தார்.